உயிர் உள்ள சடலங்கள்

2010/09/26


          
ழைச் சாரலின் நடுவில் மரணத்தின் ஓலம்
கால்கள் இரண்டும் பல மிளந்து
முள்ளந்தண்டில் மின்பாய

மழைச் சாரலின் நடுவில்
மரணத்தின் ஓலம்

காது இரண்டும் செவிடுபட
சத்தங்கள் சித்தத்தை வதைக்கின்றன
சேதி கேக்க வாய்ப்பு இல்லை
சேதத்தின் தன்மை தெரியவில்லை
வேதங்கள் ஓதி விடியல் நோக்க
விடியலும் விரக்தியில் விம்முகிறது

சந்தனக் கட்டையில் பல்லுத் துலக்குவது
பரம்பரை வழக்கம்
சந்தனத்தை உரசி நெற்றியில் இடுவது
பாரம்பரிய விளக்கம்
தூய இருள் - அதற்கு துறவு கோல் ஒளி
துன்பச் சிறை - அதற்கு துறவு கோல் - எந்த வழி


சொந்த மண் தீயின் நாக்கில்
வெந்து தீய்கிறது
வந்த மண் வந்தாரை மீண்டும்
வழி அனுப்புகிறது
எந்த மண்ணை நாங்கள் சுவாசிப்போம்

மழைச்சாரலின் நடுவில் மரண ஓலம்

வேட்டுச் சத்தங்கள் வானைப் பிளக்க 
ஓய்ந்தது அந்த ஓலம் - பாசையும் இல்லை
நாட்டின் நலம் கருதி வீட்டின் சாரலில்
விழுந்தது மழை பெருத்த ஓசையில்
காற்று கதறியது இடியோ அதறியது
விண்ணில் இருந்து மண்ணை நோக்கி
பளிச் பளிச் என்று முத்தமிட்டன – அது மின்னல்

நாட்கள் எண்ணினோம் நாங்கள்
ஒளிந்த தலைகள் மீண்டும் வெளியில் தோன்றின
சேதியேதும் புரியவில்லை ஆனால் - ஓலத்தின்
ஓசை ஒழிந்ததற்கு அர்த்தம் புரிந்தது

அணைகளை தாண்டி வெள்ளம் விரைந்தோட அந்த
வெள்ளத்தின் மேல் செத்த உடல்கள் உருண் டோடியது
சோவென்று புயலும் அவற்றை விரட்டிச் சென்றது

விறைத்த உடலுடன் விம்மாத மனதுடன் விழித்தது 
கண்களில் கண்ணீர் இல்லை
மிதந்த சடலங்களை விரைந்து எடுக்கவில்லை
விலகாமல் நின்ற நாமும் உயிர் உள்ள சடலங்கள்தான்.
READ MORE - உயிர் உள்ள சடலங்கள்

வாழ்த்துக்கள் பாட்டா

2010/07/29





"உதயன்' பிரதம ஆசிரியருக்கு சாதனையாளர் விருது 

------------------------------------------------------------------------------------------- 



அதிசிறந்த ஊடகவியலாளர்களுக்காக ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி வரும் இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் சங்கமும் இலங்கை பத்திரிகை நிறுவன மும் இணைந்து 2009ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் வைபவத்தை நாளை செவ்வாய்க்கிழமை நடத்த உள்ளன. இந்த விருதுகள் தொடர்பில் 14 பிரி 



அதிசிறந்த ஊடகவியலாளர்களுக்காக ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி வரும் இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் சங்கமும் இலங்கை பத்திரிகை நிறுவன மும் இணைந்து 2009ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் வைபவத்தை நாளை செவ்வாய்க்கிழமை நடத்த உள்ளன. 
இந்த விருதுகள் தொடர்பில் 14 பிரிவு களுக்கு 225 விண்ணப்பங்களுக்கு மேல் கிடைத்திருந்தன. 
வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுவோர்களாக ஐவர் தெரிவு செய்யப்பட்டனர். அவர்கள் தங்கப்பதக்கங்கள் வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளனர்.
 
அவர்களில் யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டு வெளி வரும் "உதயன்' நாளிதழில் ஆரம்ப காலத்திலிருந்து அதன் பிரதம ஆசிரியராகப் பணியாற்றும் ம.வ. கானமயில்நாதனும் ஒருவராவார். திரு. ம.வ. கானமயில்நாதன் ஊடகத்துறையில் 48 வருடகால மாகத் தொடர்ந்து சேவை ஆற்றிவருபவர். கட்டுபெத்த தொழில்நுட்பக் கல்லூரியின் எந்திரவியல் பொறி யியல் டிப்ளோமாதாரியான அவர் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ""ஈழநாடு'' பத்திரிகையின் உதவி ஆசிரியராக தமது சேவையை ஆரம்பித்த இவர், பின்னர் கொழும்பிலிருந்து வெளிவரும் தினபதி பத்திரிகையின் செய்தி ஆசிரியராகவும் பணி புரிந்துள்ளார். அதன் பின்னர் வீரகேசரி பத்திரிகையில் இணைந்து யாழ். செய்திப் பிரிவுக்குப் தலைமைப் பொறுப்பாளராகச் சேவையாற்றியவர். கே.பி.ஹரன், இராஜ. அரியரத்தினம், எஸ்.டி.சிவநாயகம் ஆகிய புகழ்பூத்த தமிழ்ப்பத்திரிகை ஆசிரியர்களிடம் நேரடியாகவும், புகழ்பூத்த சிங்களப் பத்திரிகையாளர் டி.பி.தனபால அவர்களது அரவணைப்பிலும் தாம் பெற்ற அனுபவமே தம்மை இந்த அளவுக்கு பத்திரிகைத் துறையில் நிலைபெற பெருந்துணை புரிந்ததாக அவருடன் நான் பத்திரிகைத் துறை தொடர்பாக கலந்துரையாடிய வேளையில் அவர்களை நன்றியுடன் நினைவுகூர்ந்தமை இவரது பெருந்தன்மைக்கு ஒரு முன்னுதாரணமாகும்.



யாழ்ப்பாணத்திலிருந்து புதிதாக தமிழ் நாளிதழ் ஒன்றை வெளியிட வேண்டும் என்ற கருத்தையும் விருப்பத்தையும் கொண்டிருந்தவர் பத்திரிகையாளரும் தமிழ் உணர்வாளருமான சி.க. திருச்சிற்றம்பலம் அவர்கள். இற்றைக்கு 25 ஆண்டுகளுக்கு முன்னர் அவரது மனதில் எழுந்த விருப்பத்தின் விளைவாக "உதயன்' நாளிதழை ஆரம்பிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன. பத்திரிகை ஆரம்பிப்பதற்கான பொறுப்புக்களை ஏற்றுச் செயற்பட்ட நிர்வாகி அமரர் சி.க.திருச்சிற்றம்பலம் ஆவார். உதயன் நாளிதழுக்கான பிரதம ஆசிரியராகப் பணிப்பாளர் சபையிடம் முன்மொழியப்பட்டவர் திரு.கானமயில்நாதன். அவருக்குப் பக்கத் துணையாக இருந்தவர் முன்னாள் ஆசிரியர் திரு.ந.வித்தியாதரன் ஆவார்.


 
உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பொறுப்பை ஏற்று 1985ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதியன்று முதன்முதலாக யாழ். குடாநாட்டு மக்களுக்கு ""உதயன்'' பத்திரிகையை அறிமுகம் செய்த கானமயில்நாதன், அவர் மீதான கொலைமுயற்சியில் இருந்து தப்பி, அதனால் ஏற்பட்ட உடல் ரீதியான பாதிப்புகளால் வைத்திய சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருந்த வேளை தவிர இற்றைவரை, உதயன் பத்திரிகை தனது 25ஆவது அகவையைப் பூர்த்தி செய்ய இன்னமும் ஐந்து மாதங்களே இருக்கும் நிலையில் அதன் பிரதம ஆசிரியராகவிருந்து ஓயாது அதனை வழிநடத்திச் செல்கிறார். இத்தனைக்கும் "உதயன்' பத்திரிகையுடன் மட்டும் தமது பணியை மட்டுப்படுத்திக் கொள்ளாது, 1986 ஆம் ஆண்டில் "உதயனின்' வார இதழாக பல்சுவை அம்சங்களை உள்ளடக்கி "சஞ்சீவி' என்ற பெயரிலும், "அர்ச்சுனா' என்ற பெயரில் மாணவர்களுக்கான சஞ்சிகை, "ஞானக்கதிர்' என்ற பெயரில் சமய சஞ்சிகை மற்றும் "ஜோதிடஜோதி' என்ற பெயரில் சோதிட சஞ்சிகை என்பவற்றையும் பிரதம ஆசிரியராக இருந்து மாதாந்த சஞ்சிகைகளாக வெளியிட்டுள்ளார். 

அந்த வகையில் அவரது நீண்டகால, தொடர்ச்சியான, அயராத பணியை இனம் கண்டு இலங்கைப் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கமும் இலங்கைப் பத்திரிகை நிறுவனமும் 2009ஆம் ஆண்டுக்கான ஊடகத்துறையின் வாழ்நாள் சாதனையாளர் விருதை அவருக்கு வழங்கிக் கௌரவித்துள்ளமை பாராட்டப்பட வேண்டியதாகும். "உதயன்' பத்திரிகை தனது 25 ஆண்டு காலப் பத்திரிகைப் பணியில் சாதித்த சாதனைகளைப் பட்டியலிட்டால் அது நீண்டு செல்லும். அந்த வகையில் "உதயன்' பத்திரிகையின் அளப்பரிய சேவைக்கு விருதாக 1998 ஆம் ஆண்டுக்கான துணிச்சலான பத்திரிகைக்கான விருது, 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த இதழியல் பெறுபேற்றுக்கான விருது மற்றும் மக்கள் சேவை ஊடகம் மற்றும் சகிப்புத் தன்மைக்கான ஊடக விருது என்பவற்றை "உதயன்' ஈட்டிக்கொள்வதற்கு தம்மை முதன்மைப் படுத்தாது பிரதம ஆசிரியர் ஆற்றிவந்த அர்ப்பணிப்புமிக்க சேவையும் ஏனைய ஆசிரியர் பீட அலுவர்களின் கூட்டுமுயற்சியும் முக்கியம் வாய்ந்தவை. "உதயன்' பத்திரிகை தனது கடந்த 25 வருடகால பத்திரிகைப் பணியில் எதிர்கொண்ட சவால்கள், சந்தித்த சோதனைகள், அனுபவித்த வேதனைகள், அனுபவங்கள் ஏராளம்; உயிரிழப்புக்கள் சொத்திழப்புக்கள் எனப் பல பயங்கர அனுபவங்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்த வரலாறு உதயனின் வாசக அபிமானிகள் அறியாதவையல்ல. அந்த வகையில் அந்த வகையில் ஆசிரிய பீடத்தினரின் அர்ப்பணிப்புடனான பங்களிப்புடன், பத்திரிகை எதிர்கொண்ட வேதனையான, சோதனையான அனுபவங்களுக்கெல்லாம் முகம் கொடுத்து வாசகர் மத்தியில் அதற்குள்ள அபிமானம் குன்றிவிடாமல் உலாவரச் செய்துவரும் பிரதம ஆசிரியர் கானமயில்நாதன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவித்துள்ளது பொருத்தமானதே. 
பதவியிலிருந்த அரசுக்களின் முறையற்ற அரசியல் செயற்பாடுகளைத் துணிச்சலுடன் விமர்சித்து, கண்டித்துக் கருத்துக்களை வெளியிட்டதன் மூலம், தமிழ்ப் பொதுமக்களுக்கு அந்தந்த வேளைய ஆட்சியாளர்கள், அரச நிர்வாகத் தரப்புக்கள் இழைத்த தவறுகளை, ஏற்படுத்திய நட்டங்களை துணிச்சலாகத் செய்தியின் மூலமும் தமது எழுத்தின் மூலமும் விமர்சனக் கட்டுரைகளைப் பிரசுரித்ததன் மூலமும் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு உறைக்கத்தக்க விதத்தில், அவர்களைச் சிந்திக்க வைக்கச் செய்யும் விதத்தில், பொதுமக்கள் அவை குறித்து அறிந்து தெரிந்துகொள்ள வைக்கம் வித்தில், நடுநிலை நின்று விமர்சித்து, இவர் பத்திரிகைப் பணி செய்துள்ளார்; செய்துவருகிறார். 

* இந்திய அமைதி காக்கும் படை வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் நிலைகொண்டு சிவில் நிர்வாகத்தைத் தமது கையிலெடுத்துச் செயற்பட்ட காலகட்டத்தில், உதயன் பத்திரிகையில் இந்திய அமைதிகாக்கும் சீரணிக்க முடியாதவை எனக் கருதப்பட்டவற்றைச் சுட்டிக்காட்டி, புட்டுக்காட்டி, கண்டித்து விமர்சித்து செய்திகளை வெளியிட்டதன் மூலம் பல தடவைகள் யாழ்.பிராந்திய இந்திய அமைதிகாக்கும் படை உயரதிகாரியால் தமது அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டு, உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டவர்; கடும் கண்டனத்துக்கு உள்ளானவர்.
 
* இலங்கை இராணுவத் தரப்பினரால் யாழ். மாவட்ட இராணுவத் தலைமையகம் அமைந்துள்ள பலாலிக்குப் பல தடவைகள் அழைக்கப்பட்டு நேரிலும், தொலைபேசி உரையாடல் ஊடாகவும் உதயனில் இலங்கை அரசின் செயற்பாடுகள் தொடர்பான விமர்சனக் கருத்துக்களை வெளியிட்டதாகக் குற்றம் சாட்டி கண்டிக்கப்பட்டவர். இவை யாவற்றுக்கும் மேலாக 2001ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் திகதி காலையில் தமது பத்திரிகை அலுவலகத்துக்குச் சென்றுகொண்டிருந்த சமயம் திட்டமிட்ட முறையில் வாகனமொன்றினால் மோதிக் கொலை செய்யும் முயற்சியிலிருந்து தெய்வாதீனமாகத் தப்பித்துக் கொண்டவர். அவ்வேளை படுகாயமடைந்ததன் காரணமாக கால் நடக்க இயலாது யாழ்ப்பாணம், கொழும்பு, வெளிநாடு என்று இரண்டு ஆண்டுகள் காலம் பல்வேறு இடங்களிலும் சிகிச்சை பெறவேண்டிய துர்ப்பாக்கியத்துக்கு உட்பட்டவர். அவ்வித உயிராபத்திலிருந்து தப்பித்துக் கொண்டபோதும், மூப்பு நிலையிலும் உடற்தளர்வு இருந்தபோதிலும் உள்ளத்தால் தளர்வின்றி இன்றும் தொடர்ந்து பத்திரிகைப் பணியை ஆற்றிவருகிறார்.

* இத்தகைய சோதனைகள் யாவற்றுக்கும் சிகரம் வைத்தமை போன்று 2006ஆம் ஆண்டு மே மாதம் 02ஆம் திகதியன்று முன்னிரவு வேளையில் உதயன் நிறுவனத்துக்குள் அத்துமீறிப் பிரவேசித்த ஆயுததாரிகள் குழுவொன்று நிகழ்த்திய வெறியாட்டத்தில் "உதயன்' நிறுவன ஊழியர்கள் இருவர் உயிரிழந்தும் மற்றுமிருவர் படுகாயங்களுக்கு உள்ளாகிய பின்னர் 
உருவான பாதகமான சூழ்நிலையிலும் "உதயன்' தொடர்ந்து வெளிவருவதில் பிரதம ஆசிரியர் கானமயில்நாதன் தளத்தில் நின்று அர்ப்பணிப்புடன் ஆற்றும் பணி அவரது பத்திரிகைத் துறைச் சேவையில் புதிய பரிமாணத்தைக் கொண்டுள்ளது. அவருக்குப் பக்கபலமாக நின்று உழைக்கும் பத்திரிகையாளர்களும் பாராட்டப்பட வேண்டியவர்களே.

இன்றுவரை "உதயனின்' இயக்கத்துக்கு உதயன் பத்திரிகையூடாக தமிழ் மக்களுக்கு நடுநிலை நின்று, உள்ளதை உள்ளபடி வெளிப்படுத்திவரும் பிரதம ஆசிரியரின் பத்திரிகைப் பணி தங்குதடையின்றி மென்மேலும் தொடர்ந்து தமிழ் மக்களுக்குக் கிட்ட வேண்டும் என்பது "உதயன்' வாசக நேயர்களது பிரார்தனையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. 
அவர் தொடர்ந்தும் தமது அர்ப்பணிப்புடனான பத்திரிகைப் பணியில் நின்று நிலைத்து தமிழ்ச் சமுதாயத் துக்கும் இனத்துக்கும் தொண்டாற்ற இறையருள் கிட்டப் பிரார்த்திக்கின்றேன்.


READ MORE - வாழ்த்துக்கள் பாட்டா

ஊர் வசை

2009/12/21

























கையிலே ஒரு குழந்தை
கழுத்திலே ஒரு குழந்தை
இரண்டும் இங்கு போதா தென்று
வயிற்றிலே மறு குழந்தை


நெற்றியிலே பொட்டைக் காணோம்
பக்கத்திலே கணவனைக் காணோம்
காலிலே முள்ளுக் குத்தக்
காப்பதற்கும் செருப்பைக் காணோம்
                                                    (கையிலே)


கண்ணைச் சுற்றி கண்ணீர் உண்டு
உடலை ஒட்டி நோயும் உண்டு
எண்ணம் எல்லாம் பயமும் உண்டு
ஆறுதற்கு - இது காலமும் அன்று
                                                 (கையிலே)


தொடர்ந்த பாவம் நெற்றிவரை
கட்டிய பாவம் கழுத்து வரை
தொட்ட பாவம் வயிறு வரை
விட்டதா பாவம் இன்று வரை
                                     (கையிலே)


கன்னிப் பருவத்திற் கற்சிலையாள்
கற்றாள் நற்பாடம் பொற்சிலையாய்
காதற் கனியொன்று கைப்பிடித்தாள்
தொடர்ந்தாள் நெற்றியில் பொட்டுமிட்டான்
                                                                (கையிலே)


உற்றார் உறவினர் ஊர்வலமாம்
ஊரார் வலம் வரக் கச்சேரியாம்
கற்றார் நல்லதோர் நாள் சொல்ல
காலைப் பனியிலே கல்யாணமாம்
                                                (கையிலே)


பெற்றாள் அவள் பெண் இயந்திரமாம்
கற்றாள் பாடம் கடைசியிலே 
கணவன் பெற்றான் புதிய களியொன்று
கை விட்டான் சலித்தது இவளென்று
                                                      (கையிலே)


உற்றார் மற்றார் சூழ்ந்து வந்து
சுட்டார் வசையால் - செயலிழந்து
செத்தால் உலகம் இனிக்கு மென
இதுதான் முதலும் முடிவுமென
நடந்தாள் - அவனிடம்


கையிலே ஒரு குழந்தை
கழுத்திலே ஒரு குழந்தை
இரண்டு மிங்கு போதா தென்று
வயிற்றிலே மறு குழந்தை



-பகீரதன்-
READ MORE - ஊர் வசை

வேலை நிட்சயம்

2009/09/23





வேலை நிட்சயம்
கிடைக்கும் சத்தியம் 
உழைத்து உண்பதே 
வரும்கால லட்சியம் .


வேலை கொடுத்தல் 
தந்தவர் மாணம்-நிலைக்கும் 
தர அவர் மறுத்தால் 
பாவம் அவரை கலைக்கும் .


அதோ வாணம்
   பரந்து கிடக்கு
எந்தன் வாழ்க்கை
   குறுகிக் கிடக்கு .


'வேலை நிட்சயம்'


வேலை ஒன்று கிடைக்காமல் 
என்குடும்பம் பிழைக்காது
வயிறுகள் எரியலாம்
அடுப்பு மட்டும் எரியாது.

வேலைத்தளம் திறந்த்தாலும்
எனக்கு வேலை கிடைக்காது
தேடுவேன்  தேடுவேன் 
கிடைக்கும் வரை ஓயாது.

ஒவ்வொரு மாதமும் 
செலவு நிறைந்துள்ளதே
ஒவ்வொரு நாட்களும்
வறுமை எமைக் கொல்லுதே.

"எங்கள் வாழ்க்கை
என்று உருப்படுமோ"

"வேலை நிட்சயம் 

ஒருவனது திண்டாட்டம் 
அடுத்தவரின் கொண்டாட்டம்
அவர்களின் நிலைகளும் 
என்று வரும் என்னாட்டம்.

சொத்து சுகம் இல்லாமல் 
வாழ்வில் என்ன சந்தோசம் 
காரிலே  செல்வதில் 
இருக்கும் ஒரு உட்சாகம்

குடும்பமும் பிள்ளையும் 
எனது  சந்தோசமே 
வேலை தேடுவது 
எனது போராட்டமே.

என்றோ ஒருநாள் வேலை 
        கிடைத்திடுமே........................



ஒழித்தோன்றல் பகீ
(neram-11.14 iravu 29-10-1999) 



READ MORE - வேலை நிட்சயம்

இதுதான் விலை

2009/05/29




ஆடவர் என்ன விலை? என்ன விலை?
      மீசை உள்ளவர் வாருங்கள் எங்களிடம்
காசுக்கு நாங்கள் பேரம் பேசுபவரல்ல
      காசைக் கொடுத்து ஆண்களை வாங்குபவர்
வீரம் பேசும் ஆண்களுக்கு
      பேரம் பேசும் பெண்கள் நாங்கள்
சோரம் போவது நாங்கள் அல்ல
      வீரம் பேசும் ஆண்கள் தான்


உடல் விற்று உலாவும் பெண்களே
      உலகம் அல்ல – ஆனால்
தம்மை தாமே பேரம் பேசும்
      ஆண்களும் அருமை அல்ல
வீட்டுக்குள்ளே கூடுகட்டி
      கூட்டினுள் எமை அமர்த்தி
நாட்டுக்குள் ஆண்மை பேசும் ஆடவரே
      உம்மை பேரம் பேசும் பெண்கள் நாங்கள்
நாளை நாம் உங்கள் வீட்டுக்கு வருவோம்
      அங்கே நீங்கள் சமைந்திருங்கள்
காளை உந்தன் ஆண்மை பார்க்க
      காசுப் பொதிகள் எங்கள் கையில் இருக்கு
சேலை கட்ட தெரியாவிட்டால் தேற்றிக் கொண்டு
      ஆடை மாற்று
சேதி சொல்ல ஆள் வருவார் அதுவரை
      காத்திருங்கள்


நான்கு பேரை கேட்டு உந்தன்
      பெயரை நாங்கள் அறிந்த பின்பு
சேதி சொல்ல ஆள் வருவார்
      அதுவரை நீங்கள் காத்திருங்கள்
கேடு கெட்ட ஆண்களுக்கு
      கோடு போட்டு வீட்டில் வைக்க
பெற்றோர் உமக்கு எச்சரிக்கை
      பொறுப்போடு கண்காணிக்க


நாளை நம்மவர் உன்வீடு வரும்போது – நீ
      தீயவன் எனக் கேட்டால்
கல்யாணச் சந்தையில் உனக்கு கால் ரூபா கூட
      கொடுக்க மாட்டோம்
காலம் தோறும் காத்திருந்து
      கந்தலாகி மனம் உடைந்து
மானங் கெட்டு மனிதர்களிடையில்
      தீய சொற்களுக்குள்ளாகி
கோலம் மாறி களையிழந்து
      காளை என்னும் செருக்கிழந்து
மூளை கெட்டு முதுமை பெற்று
      மரண தேவனுக்கு மாங்கல்யம் கட்டு
மரண தேவனுக்கு மாங்கல்யம் கட்டு




- நா. பகீரதன் -
READ MORE - இதுதான் விலை

இன்று ஒரு கடிதம்.....

2008/11/06






ன்று ஒரு கடிதம்..... நினைவுகளால், துடிப்புக்களால், உணர்வுகளால், வலிகளால் மனது கனத்திருக்க, இன்று ஒரு கடிதம் எழுதுகிறேன்.



காகிதத்தில் கண்ணீர் துளி விழ, காட்சிகள் கண் முன்னோட, பேனாவை விரல்கள் அழுத்தும் விசை குறைய, இன்று ஒரு கடிதம் எழுதுகிறேன்.


எத்தனையோ கண்டுவிட்டேன் அச்சின்னஞ்சிறு வயதிலேயே. எனை சுற்றி வந்தவர்கள் ஒருவர் பின் ஒருவராய் மறைந்து போவதையும், மறைந்தவர்கள் மீண்டும் வருவதில்லை என்பதையும், கண்டுவிட்டேன். 


எத்தனையோ கண்டுவிட்டேன்....


பக்கத்து வீட்டு பாப்பா, எதிர் வீட்டு பாட்டி, அண்டைவீட்டு அங்கிள், அதற்கடுத்த வீட்டு அண்ணா, ஏன் எனது அக்கா இப்படி எத்தனை பேர் போயிருப்பார் போரினாலே.


அங்காங்கே குண்டுவிழுந்து நிலத்தில் குழிவிழுந்த காட்சிகளும். ஆமி வந்தால் அடிக்க வயலினூடே வரிசையாய் பொடி நடையாய் புலியாய் புழுதி கிளப்பி போகும் அண்ணாமாரும் அக்காமாறும், அவர்களை பார்த்து கண்ணீர் விடும் எண்ணில்லா மனங்களும், காட்சிகளாய் என் முன்னே வந்து நிற்க.... ஒரு கடிதம் எழுதுகிறேன்.


பாடசாலையிலே சின்னஞ்சிறுவர் நாம் சொந்த உழைப்பினிலே பங்கர் கிண்டியதும், ஓடியாடி விளையாடியதையும் விட சுப்பர்சோனிக்குக்கு பயந்தோடி பங்கருக்குள் பதுங்கியது, பங்கருக்குள் இருந்த பாம்பு கடித்து நன்பன் இறந்ததுவும் நினைவுகளாய் அலைமோத... இன்று ஒரு கடிதம் எழுதுகிறேன்.


எழுத்துக்கள் முற்றுப் புள்ளியுடன் மோதியும், ஆச்சரிய குறியிடம் அடிபட்டும், கேள்விக்குறியிடம் சிக்குண்டும், எதுகை மோனை போல் சலசலத்தும் வரைகிறது காகித்தில்... "வேண்டாம்" என்று.


நவாலி வெளியிலே அடுக்கடுக்காய் அந்த சகடை போட்ட எட்டும் காற்றில் பறந்து வந்த காட்சிகளும், நெஞ்சுநோவு என்று வழியிலேயே குந்தி இருந்து எம்மை தேவாலத்தை அடையவிடாத காப்பாற்றிய அந்த பெருசும் காட்சிகளாய் வர.. எழுதுகிறேன் ஒரு கடிதம்.


அப்பாவும் ,அம்மாவும், அக்காவும் , அண்ணாவும், சுற்றமும் அகதியாய் அன்று ஓடியதன் கால் வலி இன்று உணர்ந்திட.. எழுதுகிறேன் ஒரு கடிதம்.


நெட்டைக்கால் தாத்தாவுக்கு கட்டைக்கால் பொருத்தியதும், கம்பீரமாய் நின்றவர் கூனிகுறுகியதும் நினைவுகளாய் மனதில் விழ... எழுதுகிறேன் ஒரு கடிதம்.


வேந்தன் மாமா வேங்கையாய் ஆகியதும் வெம்பி வெம்பி நாம் அழுததுவும்
பயந்தொடிய அக்காலங்களும் போராட சென்றவர்கட்டு சுட்டனுப்பிய பருத்தித்துறை வடையும் ஞாபகங்களாய் இரைமீட்க... எழுதுகிறேன் ஒரு கடிதம்.



தாத்தா மென்று துப்பிய வெற்றிலை சிவப்பு கறை கண்டு அலரித்துடித்த அப்பத்தா- பிரிதொரு நாளில், அப்பாவியாய் குருதிகளுக்கு நடுவில் உறங்கிய காட்சிகளும் நினைவில் வர.... எழுதுகின்றேன் ஒரு கடிதம் "வேண்டாம் என்று"



அக் கொடுமைகளை நித்தம் நான் கண்டுகொண்டிருந்தால் எனக்கும் ஒருவித வெறி வந்திருக்கும்... ஆனால் பாதியிலே இங்கு வந்ததால் பயம்தான் வந்ததுவோ? தெரியவில்லை..


ஆதலினால் பயத்துடன் எழுதுகிறேன் ஒரு கடிதம் "வேண்டாம் என்று"








மதிப்புக்குறியவர்களுக்கு, 
என்னை ஜெர்மன் ராணுவ சேவைக்கு அழைத்த அழைப்புக் கண்டேன்.
என்னுடைய நாட்டில் ஏற்பட்ட போர் சூழல்களால் நானும் என்னுடைய பெற்றோர்களும் நிறையவே பாதிக்கப்பட்டோம். உடலளவில் நான் ஜெர்மன் நாட்டு படையில் சேர தகுதி பெற்றிருந்தாலும் மனதளவில் நான் தயாரில்லை. எனினும் எனக்கு தெரியும். கட்டாய சேவை செய்தே ஆகவேண்டும் என்று. ஆகவே எனக்கு என்று நிர்ணயிக்கப்பட்ட ராணுவ சேவையை சமூகசேவையாக மாற்றிதருமாறு வேண்டுகிறேன்.

வேண்டுதலுடன்
ஜீவன்.


(யாவும் கற்பனையல்ல)
READ MORE - இன்று ஒரு கடிதம்.....

அழகு ஆறு

2007/05/01

"னக்கு அழகாய் தெரிகிற ஆறை அதிகம் அலட்டாமல் எழுது" என்று அன்பாய் சொன்ன துர்காவுக்கு நன்றி. முதலிலும் விசர்குணம்(வித்தியாசமான) பத்தி எழுதச்சொல்லி வேண்டுதல் விடுத்த துர்க்கா ,சினேகிதிக்கும் இந்நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மற்றவர்களின் பதிவை படிப்பதற்கே நான் அதிக நேரம் ஒதுக்குவதால் எனக்கு கிடைக்கும் குறுகிய நேரத்தில் விசர்குணம் பற்றிய பதிவு எழுத முடியாமல் காலம் போய்விட்டது.(அப்படியில்லை மானத்தை காப்பாற்றிக் கொண்டேன். :-)) ) சரி இந்த அழகான பதிவை எழுதலாம் என்று முடிவுசெய்துவிட்டேன்.

எனக்கு பிடித்தில் எல்லாம் ஒரு அழகு இருக்கிறது என்பது என் அபிப்பிராயம். அப்படி எனக்கு பிடித்த தருணங்கள் வெறும் ஆறுதானா? இதோ:

1. அன்பாய் அந்திப்பொழுதில் பூங்காவில் கெந்தல் நடை புரியும் இளம்/கிழம் ஜோடிகள்.

அப்பப்போ நேரம் கிடைக்கும்போது அருகில் உள்ள பூங்காவுக்குள் என் கண்களுடனும் என் மூன்றாவது கண் கமராவுடனும் நுழைவது வழக்கம். அங்கே இருக்கும் அழகான பூக்கள் முதல் புழுவரை என் மூன்று கண்களுக்குள்ளும் பதிந்து வைப்பது உண்டு. அப்போது அங்கே நடை பயிலும் இளம்,கிழம் ஜோடிகளும் அவர்கள் அன்பும் கண்டு வியந்ததும் உண்டு, நொந்ததுமுண்டு. { நாம் எல்லாம் எப்ப இப்படி? :-)) }

2 மாலைப்பொழுதில் ஜெர்மன் நீண்டவழி பாதையுடாக என் துவிச்சக்கர வண்டியில் நன்பர்களுடன் போட்டிபோடும் போதும், அரட்டை அடிக்கும் போதும்.

ஓவ்வொரு சனி பின்பகல் முதல் எந்த காரியமும் எனக்கு ஓடாது. நன்பர்களுடன் நாளை அடிக்க இருக்கும் அரட்டை பற்றிய சிந்தனையே. ஞாயிறு அவர்களுடன் செல்லும் அந்த அடர்ந்த(?) காட்டு நெடுவழி முதல் என் ஓட்டை துவிச்சக்கரவண்டிமுதல் அழகாய்தான் தெரியும். {சில நன்பர்களுடைய முகங்கள் என் முன் வந்து பயம் காட்டுவதை நான் இங்கே கணக்கெடுக்கவில்லை :-)) } நாங்கள் அடிக்கும் அரட்டை அப்படி! ( எப்படி? )

3. அருமையான திரைக்கதையும் அதை சிறந்த முறையில் படம்பிடிக்கக்கூடிய தொழில் நுட்பமும் கூடிவரும் திரை காவியங்கள் பார்கையிலே

நான் ஒரு சிறந்த ரசிகன்.{அப்படி நினைக்கிறேன்} அதனால்தான் அழகை ரசிக்கிறேன். அதேபோல் அழகான கதை , நடிப்பு , இசை கொண்ட திரைக்காவியங்களும் எனக்கு திகட்டுவதில்லை. தமிழ்,ஆங்கில சினிமா முதல் ஈரானிய திரைப்படங்கள் என என் ரசனை உலக அழவில் விரிந்திருக்கும். ஒரு நடிகன் முதலில் சிறந்த நடிகனாகவே ஜெயிக்க வேண்டுமே தவிர அவன் சொந்த வாழ்கையில் நல்லவனா? கெட்டவனா? அது தேவையில்லாத விடயம். அவன் ஒரு நடிகன் என்று பெயர் பெற முதலில் நடிக்க தெரிந்திருக்கவேண்டும். அதன் அடிப்படையில் நன்றாக நடிக்க தெரிந்த நடிகர்கள் எல்லோருடைய விசிறி நான்.

4.இசையே என் காதலி

இசையின் இனிமை யாருக்குத்தான் கசக்கும் .திரைப்படங்கள் போலவே பல்வேறு தரப்பட்ட இசையை ரசிக்க பிடிக்கும். தமிழ் இசைமட்டுமல்ல ஆங்கில இசைகள் கூட என்னை கவர்தன என்றால் அதுவும் எனக்கு அழகாகத்தான் தெரிந்தன. எனது தெரிவுப் பாடல் குறுவட்டை கேட்பவர்கள் தங்கள் தலையை பித்துகொள்வது திண்ணம். அவர்களுக்கு திண்டாட்டம். கட்டாயம் நான் தூங்கம்போது செவ்விந்தியன்களில் விதவிதமான புல்லாங்குழல் ஓசை கேட்க வேண்டும். (இதுவும் என் விசர்குணம்தான்) அது இல்லாவிடில் வேறு மென்மையான இசை. இப்படியான தருணங்களில் நம்ம இளையராஜா எனக்கு உதவுவார். காலை முதல் மாலை வரை இசையுடன் கழிப்பதால் அதுவும் அழகாகவே எனக்கு தென்படுகிறது.

5.தமிழ்

நான் கண்டு வியந்த , அழகை உணர்ந்தவற்றுள் தமிழுக்கே முதலிடம். எத்தனை அழகு. நான் ஓர் தமிழன் என்று சொல்லிக் கொள்வதில் என்னை பெருமைப்பட வைத்ததில் முதலிடம் எனது மொழியே. இலக்கணம் , இலக்கியம் , முத்தமிழ் , தமிழ் வார்த்தை பிரையோகம், எதுகை மோனை , அடுக்குமொழி ,அடைமொழி ம்... சொல்லிக்கொண்டே போகலாம். அனைத்துக்கும் அடிமை நான். நான் அறிந்த ஏனைய சில மொழிகளில் சொல் கொஞ்சமும் பாவனை அதிகமாகவும் இருப்பது கண்டிருக்கிறேன். ஆனால் தமிழ் நான் கண்டு வியந்த மொழி. எனக்கு தமிழ் அறிவு கொஞ்சம் குறைவுதான் என்றாலும் மற்றவர் கவி,கட்டுரை,விமர்சனம் பார்த்து கற்றதும் ரசித்ததும் ஏராளம்.

6.எங்கள் குடும்பம்

பரபரப்பான மேலைத்தேய வாழ்க்கையில் கூட குறிப்பிட்ட ஒரு தினம் ஒதுக்கி கலந்துரையாடுவதும் , குதித்து விளையாடுவதும் எம் வீட்டின் மாற்ற முடியாத வழக்கம். எந்த ஒரு துன்பமும் எங்களை அடைய விடாமல் பாதுகாத்து கொள்ளும் எம் பெற்றோர்களையும் , அவர்களை மனதளவில் நோகடிக்காத எம்மையும் எமக்கே பிடித்திருக்கிறது. கஸ்டப்பட்ட காலத்திலும் கடிக்க எமக்கு கடிஜோக் இருந்திருக்கிறது.கஸ்டத்தை மறந்திருக்கிறோம். எமக்கு கடவுள் தந்த கொடை இது. எனக்கும்தான்.



சரி எல்லாம் முடிந்தது நம்ம பங்குக்கு மூன்று பேரை அழைக்க வேண்டும். அவர்கள்

சுதேசன்
லோகா
கோபு

READ MORE - அழகு ஆறு

வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்க.....

2007/03/03


இது வேலையில்லாமல் ஊர்சுற்றும் சிறியவர்களுக்கும் பெரியவர்களுக்கும் மிகவும் பயனுள்ள விடயம்.


ஜெர்மனியை பொருத்தவரை வேலையில்லாத்திண்டாட்டம் பெரும் பிரச்சனை. காரணம் ஜெர்மனியிலிருந்த பல தொழிற்சாலைகள் இடம் பெயருவதுதான். இடம்பெயர அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்கிறார்கள். சரி அது எல்லாம் நமது சின்ன மூளைக்கு விளங்காத விடயம். இப்ப நான் உங்களுக்கு சொல்ல வந்த விடயமே வேற.


வீட்டுக்குள்ளிருந்து பணம் சம்பாதிக்க முடியும். அது எப்படி என்று புருவத்தை உயர்த்தி நீங்கள் கேட்பது புரிகிறது.
இதோ அதற்கான மிகச்சிறந்த , நம்பிக்கையான , ஒரு செலவும் இல்லாத வழி இது. (இதை என்னுடைய தங்கைகளும் கையாளுகிறார்கள்) நீங்களே முதலாளி , நீங்களே தொழிலாளி.


அதாவது நீங்கள் வீட்டில் செய்யும் ஒவ்வொரு வேலைக்கும் பணம் அறவிடலாம்.பலசரக்கு கடைக்கு அம்மாவுடன் போனால் ஒரு குறிப்பிட்ட காசு, வீட்டை சுத்தம் செய்தால் ஒரு தொகைப்பணம் என்று (அதிகம் கூடாது 0.50சதம் தொடங்கி 5 யூரோ வரை, தங்களுடைய நாட்டு பணத்திற்கு ஏற்ப நீங்களே மாற்றிக்கொள்ளலாம்.) ஒரு விலைப்பட்டியல் தயார் செய்து தங்களுடைய வீட்டிலிருக்கும் பணமுதலைகளிடம் கொடுக்கலாம்.(யாரிடம் அதிகம் பணம் புளங்கிறதோ அவர்களே இதற்கு சரியான தெரிவு)
இந்த திட்டத்துக்கு அவர்கள் மறுக்கும் பட்சத்தில் வேறு வழி மேற்கொள்ளலாம்.


அது பிளாக்மெயில் (பயமுறுத்துதல்) :-)). அவர்கள் உங்கள் மேல் பொலிஸ் கேஸ் போடாமல் இருக்கும் படியான எத்தனையோ பிளாக்மெயில்கள் இருக்கு. உ+ம் : இவ்வளவு காசு தந்தால் தான் நான் போய் குளிப்பேன் , ..................... , பல பல



இத்தகவல்கள் வீட்டிலிந்து பணம் சம்பாதிக்க உதவும் என நம்புகிறேன்.






{ஹா ஹா இல்லை என் பதிவை அதிகம்பேர் பார்வையிட வைக்க முடியும் என்று என் நன்பனுடன் ஒரு சின்ன பெட். அடுத்த முறை ஏதாவது பிரியோசனமா எழுதுகிறேன்.ஹா ஹா}
READ MORE - வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்க.....

காதலாம் காதல் கன்றாவிக் காதல்

2007/01/24



நான் சிரிக்க நீ சிரித்து
நான் அழ நீ அழுது
நான் முறைக்க நீ முறைத்து
என் காதலியானாய்....
ஆனாலுமோர் சந்தேகம்
என் வீட்டு கண்ணாடியும்
இதைத்தானே செய்கிறது






போ என்றேன் போனாய்

வா என்றேன் வந்தாய்
கிட என்றேன் கிடந்தாய்
ஆனாலுமோர் சந்தேகம்
என் வீட்டு நாய்குட்டியும்
இதைத்தானே செய்கிறது







ஏன் இப்படியென்றபோது எல்லாமே

என்மீது கொண்ட காதலால் என்றாய்
என்காதலால் நீ "அஃறிணையாவதா"?
வேண்டவேவேண்டாம் போய்விடென்றேன்





போயேபோய் விட்டாய் நல்லவேளை

ஏனென கேட்கவில்லை கேட்டிருந்தால்
என்மீது கொண்ட காதலால் என்றிருப்பாய்.

-Sutheesan-


READ MORE - காதலாம் காதல் கன்றாவிக் காதல்

இது என்ன அதிசயம்.

2007/01/12




உன்னைக் கண்டதும் - என்
கண்கள் இமைக்க மறுக்கின்றன என்கிறாய்.
அடி போ இது என்ன அதிசயம்
உன்னைக்கண்டதும் என் இதயமே
துடிப்பதில்லை.

READ MORE - இது என்ன அதிசயம்.

ஆணின் பார்வையில் பெண்

2006/10/23


உன்னை நிலவுக்கு ஒப்பாக்கினர்
நீ இரவில்மட்டும் தேவைப்படுவதனால்

உன்னை பேயென்று செப்பினர்
உன்னைகண்ட பின் அவர்தம்
தூக்கம்தொலைத்ததினால்

கற்புயெனும் போர்வை கொண்டு
உன்னை போத்தினர்
தாம் குளிர்காய்வதற்காய்

உந்நிலையில் தாயை மட்டும்
போற்றினர் தாம் செய்யும்
பிழைகள்தனை நீ பொறுப்பதனால்

-சுதேசன்-
READ MORE - ஆணின் பார்வையில் பெண்

நாளையும் தொடரும் காதல் காவியம்

2006/09/16



என் இனியவளே
உன் ஓரப் பார்வையாளே
என்னை உன்னருகே இழுத்தவளே
ஒரு நிமிடம் என்றாலும்
ஓர் ஆயிரம் ஆண்டு என்றாலும்
உன்னோடுதான் என் வாழ்க்கை என்றவளே


உன் பாதம் காட்டி எனைக் கொன்றவளே
நான் தூங்க உன் இதயத்தில்
இடம் வேண்டும் என்றவளே
உன் தூக்கத்தை கெடுக்குமெனில் என் இதயத் துடிப்பையும் நிறுத்துவேன் என்றதுமே
எனை கட்டியணைத்து முத்தமிட்டவளே


பேசிப் பேசி எனக்கு
உனைப் புரிய வைத்தவளே
நான் பேசாமலே - என்னை
புரிந்து கொண்டாவளே
நம் உறவுக்கும் - ஓர்
அர்த்தம்வேண்டும் என்றவளே
எனக்கு உன் உயிரையும் கொடுத்தவளே


கைகளாளே எனை சிறை பிடித்தவளே
கட்டியணைத்து - என்
இதயதுடிப்பை கணக்கொடுத்தவளே
இப்படியே நிலவுக்கு போவோமா என்றவளே
நிலவுதான் என் நெஞ்சில்
தலைவைத்து துயில் கொள்கிறது - என்றதுமே
வெட்கியே என் வேர் அறுத்து
நிலத்தில் எனை சாய்தவளே


என் நக இடுக்கிலிருக்கும் அழுக்குகூட
எனைவிட்டு போக மறுக்கிறது - என்றவளே
உனை தொட்ட எவர்தான்
உனை விட்டுபிரிவார் - நானும்
அப்படியே என்றதுமே
சத்தமாய் சிரித்து - என்
சத்தையேல்லாம் உறிஞ்சியவளே


இப்போது என் அம்மா - இங்கே வந்தால்
என்ன செய்வாய்யென வினாத்தொடுத்தவளே
"அத்தை" என்பேன் என்றதுமே
புன்சிரிப்பால் என் நெஞ்சை புண்ணாக்கியவளே
திரும்ப திரும்ப கடிகாரத்தை பார்த்தவளே
உன் அன்பு சிறையிலிருந்து
என்னை விடுவிக்க நினைத்தவளே


என் இதயத்தை புண்ணாக்கியவளே
என் உயிரை எடுத்தவளே
நோய்யுற்ற நான் காத்திருப்பேன்
நாளையும் நீ காதலுடன் வந்து
எனக்கு மோட்சம் அழிப்பாயேன
போய் வா தோழியே
என் உயிரே
நம் காதல் - காவியத்தை
நாம் நாளை தொடர்வோம்
அதுவரையில்...



READ MORE - நாளையும் தொடரும் காதல் காவியம்

மரணக் "குறி"

2006/07/14



மரணம் அது ஓர் முற்றுப்புள்ளி ( . )
மந்தைகளாய் ஓடி ஆடி இளைத்த
மனிதர்களுக்கு இறைவன் சொன்ன மந்திரம்



மரணம் அது ஓர் ஆச்சரியம் ( ! )
நேற்று பிறந்த குழந்தையை சுனாமியிலும்
ரெயிலில் போன என் அன்னையை தீவிரவாதத்திலும்
தன்வசம் இழுத்துப்போகையிலே



மரணம் ஓர் வினா ( ? )
நோயினால் துன்புறும் மனிதர் தமை
உலகிற்கு அதிபாரமாய் இருக்கும் கயவர்தமை
பூமியிலே விட்டுவைக்கயிலே



மரணம் ஓர் சொல் ( "" )
கவி,கட்டுரை எழுதி காசு பார்க்கும்
கவிஞர்களுக்கும் கற்பனாவாதிகளுக்கும்



மொத்தத்தில் மரணம் ஓர் புதிர்
தவழ்ந்த குழந்தை முதல் தள்ளாடும்
தாத்தா வரை தன்வசம் அணைப்பதால்
மரணம் ஒரு புரியா புதிர்.

READ MORE - மரணக் "குறி"

இதனிலும் கேவலமுண்டோ....

2006/06/12



தெற்கிலே "அம்மே" யும் வடக்கிலே "அம்மா"வும்மென
சிறார் கூப்பாடு ஒன்றுதான் ஏனோ..
வடக்கின் கூப்பாடு மட்டும் இவர்கள் காதில்விழ
தெழிவின்மையும், நீண்டகாலமும்....

அவ்வண்ணமே விழுந்தாலும்
போர் கொடுத்த விழைவின் அநாதைகளான இவர்கள்
"செஞ்சோலை" தனிலிருந்தால் சிறார் படை
ஆட்சேர்ப்பு என்ற பொய்யுரைகளாய்..

வடகிழக்கின் சிறார்! படிக்க பள்ளியில்லை,
காக்க காப்பமுமில்லை பொருளாதாரத்
தடையின் எச்சமாகிய எலும்புக்கூட்டங்களாக...

அல்லைப்பிடியிலும், வங்காலையிலும்
தூக்கில் தொங்கவிடவும்,வெட்டிகூறுபோடவும்
இவர்கள் செய்த வினைதான் என்ன?
யாமறிந்த வகையில் ஈழத்தினில் தமிழனாய் தவழ்ந்ததால்

இதனிலும் கேவலம் தொட்டதற்கெல்லாம்
அறிக்கையறிக்கைகளாய் விளாசித்தள்ளும்
சர்வதேச சமூகத்திடம் இந்நேரம் தனில்
"பேப்பரும்,பேனாவும்" இல்லாமல் போனதுதான். :-((

-சுதேசன்-
READ MORE - இதனிலும் கேவலமுண்டோ....

உங்களுக்கு ஆபத்து

2006/05/16


இப்போது எல்லாம் எனது மின்னஞ்சலுக்க ஏராளமான அபாயஒலி எழுப்பும் மின்னங்சல்கள் வந்து குவிகின்றன. அவற்றுள் ஏராளமானவை நமக்கு தேவைப்படாத அலம்பல்களை கொண்டிருப்பதே கண்டிருக்கிறேன். அப்படி வந்தவற்றுள் இதை என்னால் தட்டிக்கழிக்க முடியவில்லை. அதனால் அதை இங்கே பதிகிறேன். இதன் உண்மை நிலவரம் நானறியேன்.


விடயம் இதுதான்:-

நாம் தினமும் கணிப்பொறியின் முன்னால் அமர்ந்துகொண்டு லொட்டு லொட்டு என்று தட்டிக்கொண்டும் சும்மாயிருக்கின் மவுஸை பிடித்து விளையாடிக்கொண்டும் அங்கும் இங்கும் நகர்த்திக்கொண்டும் இருக்கின்றோம்.

நம்முடைய விரல்களின் அசைவுகளை கொஞ்சம் கவனியுங்கள். நாள் முழுவதும் ஒரே மாதிரியான அசைவுகள்தான். கைகளை தட்டச்சுப்பலகையின் அருகே வைத்துக்கொண்டு விரல்கள் மட்டும் தேடி தேடி எழுத்துக்களை தட்டச்சு செய்யும். சிலர் கைகள் முழுவதையும் ஒவ்வொரு எழுத்துக்கும் கொண்டு சென்று தட்டச்சு செய்வார்கள்.

இந்த தொடர் அசைவுகள் மணிக்கட்டின் தசைகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் தேய்மானத்தைக் கொடுக்கின்றது.இந்த அசைவுகள் நமக்கு சாதாரணமாய்த் தெரிந்தாலும் ஆனால் அதன் பிண்ணனியில் உள்ள பயங்கரத்தைக் கவனியுங்களேன்.




















இந்த அறுவைச்சிகிச்சையினைக் கவனிங்கள்.. இது ஏதோ பெரிய விபத்துக்களின் மூலம் நடந்ததல்ல..தினமும் தொடர்ந்து தட்டச்சு செய்ததனால் வந்த வினை இது.

இந்த அறுவைச்சிகிச்சைகக்கு உங்களுடைய மணிக்கட்டும் மாட்டவேண்டுமா?

இந்த ஆபத்திலிருந்து விடுபட கணிப்பொறி பயன்படுத்துபவர்கள் இந்த கீழ்கண்ட பயிற்சியை தினமும் 10 அல்லது 15 வினாடிகள் ஒவ்வொரு பயிற்சிக்கும் செலவழித்து கையை காப்பாற்றுங்கள்.



































இந்தப்பயிற்சியை தினமும் 3 தடவைகள் செய்தால் போதும். இதற்காக தனியாகவெல்லாம் நேரம் ஒதுக்க வேண்டாம்.

சாப்பாடு நேரம் அல்லது நண்பர்களோடு அரட்டை அடிக்கின்ற நேரம் அல்லது நடந்து சென்று கொண்டிருக்கும்பொழுது அல்லது காரில் டிராபிக்கில் மாட்டியிருக்கும் பொழுது என்று கிடைக்கின்ற சந்தர்ப்பங்களில் இந்தப்பயிற்சியை செய்யலாம்.

மணிக்கணக்கில் வேலை பார்த்து ...மணிக்கட்டை இழக்காதீர்கள்!மணி நேர பயிற்சிக்கு...மனம் ஒதுக்குங்களேன் நண்பர்களே!

READ MORE - உங்களுக்கு ஆபத்து

அன்னையே....

2006/05/14




ஓர் அன்பு அமுதசுரபி அம்மா.



"அம்மா"
மெழுகுவர்த்திபோல் உனக்காக உருகுமோர் சீவன்
சடமான பின்னும் உயிர்கொடுக்க துடிக்குமோர் உறவு
தன் குருதியை உணவாக்கி ஊட்டுமோர் உத்தமி
உன் நிழலுக்கு உருவம் கொடுக்குமோர் உடல்
உனக்கேயுனக்காய் மட்டும் பூவுலகில் வாழுமோர் உயிர்
தமிழகராதியின் அன்பிற்க்கு பொருளாகிய "அம்மா"


தாயே உன்னை தள்ளி வைத்து வாழும் தரங்கெட்டவரை மன்னித்துவிடு.

"என் வலிதான் பெரிது"
உலகம் சொல்கிறது பிரசவ வலி பெரிதென்று
மருத்துவம் சொல்கிறது பெண்ணின் மறுபிறப்பென்று
"தாயே" நான் சொல்லுகின்றேன் இவ்வுலகில்
அதை விட பெரியதோர் வலியொன்றுண்டு
நான் பிறக்கும் போது நீ கொண்ட வலியை
நான் பன்மடங்காகவன்றோ உணர்கின்றேன்
நமக்குள் பிரிவு எனும் பதம் வரும்போது......






{கவிவடித்த சுதேசனுக்கு நன்றி}

READ MORE - அன்னையே....

வதை

2006/03/24

வாலி வதைபுரிந்த
இராமனே
நீ
தங்கைகளோடு
பிறந்திருந்தால்
நிச்சயம்
சீதன வதை
புரிந்திருப்பாய்!

"ராணி" குடும்பப் பத்திரிகை 09.08.1998 (இந்தியா)

-- லோகா --
READ MORE - வதை

பாழாய்ப்போன கட்டெறும்பு

2006/03/05

கொஞ்ச நாளாய் ஜயா ரொம்ப பிசி(Busy). :-))அதுதான் தமிழ்கவிதையில என்னால ஒன்றுமே எழுத முடியவில்லை. என்றாலும் என் நன்பர்களினதும் உறவினர்களினதும் கவிதைகளை தூக்கி போட்டுக்கொண்டிருக்கிறேன். இந்த ஆக்கத்தை வாசித்ததும் எனக்கு வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை. சரி நாளைக்கு ஞாயிறு ஆயிற்றே நிறைய பேர் ஒன்லைனில(Online) :-)) சும்மா வெட்டியா அலைந்து கொண்டிருப்பாங்கள். அதில ஒருசிலராது இங்க வருவாங்கள் இல்லையா அவங்கள் படிக்க லோகா எழுதின இந்த கவிதையை இங்க போடலாம் என்று தீர்மானித்து இந்தப்பதிவு. சரி விடயத்துக்கு வருவம்.

பாழாய்ப்போன கட்டெறும்பு

மூன்று நாட்களாய் என தம்பி
மூன்று வேளை சாப்பாட்டை
முறையாக உண்ணவில்லை
ஓரிடத்தில் அமைதியாய்
ஒதுங்கியிருக்கவில்லை
எதையோ தொலைத்தவன் போல்
சோகமாய் இருந்தனன் - காண்
எல்லோர்க்கும் உள்ளது தான் -
தம்பி என்னடா உன் கவலை
இடம்பெயர்ந்து வந்ததாலா? - உன்
நண்பர்களை பிரிந்ததாலா? - இல்லை
வீட்டுப் பொருட்களை இழந்ததாலா? -ஷெல்
வீழ்ந்து செல்வ மண்ணை அழித்ததாலா?
பதிலேதும் சொல்லாமல்
நடந்து கொண்டிருந்தனன்
நிறுத்திக் கேட்டேன்
என்னவென்று சொல்லேனடா
"பாழாய்ப்போன கட்டெறும்பு
கடிக்க வேறு இடமில்லாது
"மும்தாஜி"ன் முதுகிலே
கடித்தது" என்றான் - காண்!

-"சுடர்ஒளி" வாரஇதழ் (29.07.2001) (இலங்கை)-

-லோகா -
READ MORE - பாழாய்ப்போன கட்டெறும்பு

ஈழத்தமிழன் காதல்கொண்டால்..

2006/03/04

















உன் கடைக்கண் பட்டால்
என்நெஞ்சில் ஆயிரம் "ஆட்லறி" வெடிக்கிறதே
அதுவே உன் தேப்பன் பார்த்திட்டால்
"ஜெஜசுக்குறு" ஒன்று நடக்கிறதே
நீ என்னை திட்டும் ஒவ்வொரு சொல்கூட
"A.K.47"தோட்டாக்கள் போலதான் துளையிடுதே
"கிபிர்"போல் மாயமாய் வந்து மர்மமாய்ப்போகிறாய்
என்னைக் கடந்தபின்தான் அறிந்துகொண்டேன்
நீயும் எனக்கு எமன்தானென்று..

நீ என்னை வெறுக்கிறபோதெல்லாம்
"கறுப்பு யூலை" தான் ஞாபகம்
நான் தரும் காதல் கடிதங்களை கண்டு
"ஊரடங்குச்சட்டம்" போல மொளனித்திருப்பதேனடி
நீ என்ன இந்திய காடையர் படையா?
இல்லை ஸ்ரீலங்காவின் காமவெறிப் படையா?
ஈழத்தமிழரைப்போல் என்னைப் பாடாய்படுத்துவதற்கு..

கண்ணிவெடியில் அகப்பட்டவன் போல
உன்னை கண்ட பின் நானும் ஓர் ஊனம் தானடி
ஓர் பார்வையில் நீயும் உலகவல்லரசுகளும்ஒன்றுதானடி
அமெரிக்கன் போல் வெருட்டிப்பார்க்கிறாய்
சிங்களவன் போல் அடக்கியாளப்பார்க்கிறாய்
ஆனால் நானும் ஈழத்தமிழன் போல்
சளைக்காது நிற்கிறேனே ஏன், எதற்கு
கொஞ்சமேனும் யோசிச்சுப்பாரடி யென்மூதேவி

மூதேவி என திட்டியதற்கு கூட கோபமா?
என் செல்லமே, என்னைப் பிடிச்ச சனியனே
நான் என்ன செய்ய........
நீ போகும்போது தானே அழகாயிருக்கிறாய்.


-சுதேசன்-

சொற்பதங்கள்

ஆட்லறி,A.K.47 - போரில் பயன்படுத்தப்படும்ஆயுதங்கள்,

ஜெஜசுக்குறு - இலங்கையின் வடக்கே மேற்கொள்ளப்பட்டபடைநடவடிக்கை.

கிபிர் - ஒரு வகை போர் விமானம்

கறுப்பு யூலை - இலங்கையில் தமிழர்கள்மீது சிங்களவர்களால்மேற்கொள்ளப்பட் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை.

தேப்பன் - இலங்கையின் வட்டார வழக்குச்சொல்
தந்தை என பொருள் படும்.
READ MORE - ஈழத்தமிழன் காதல்கொண்டால்..

முத்தமிட்ட அவள்!

2006/01/24

கண்ணடித்தாள் - தன்
இதழ் கடித்தாள்
கட்டியென்னை முத்தமிட்டாள்
சின்னச் சிரிப்பில் - எனை
சிலிர்க்க வைத்தாள்
"கண்ணே!" என்றேன்"
கனியமுதே!" என்றேன்"
என்னுயிர் நீ!" யென்றேன்
நான் செய்ய எண்ணியவை
அத்தனையும் அவள் செய்தாள்
என்ன தவம் செய்தேனோ - பெண்ணே
உன்னைப் பெறுவதற்கு!
கிளிச் சொண்டை திறந்து - அவள்
"குட்நைட் டாடி!" என்றாள் - ஐந்து
வயது அடையாத என்
மகள் ஆரணி...!

- லோகா -

"சஞ்சீவீ " வார இதழ் (1999) (யாழ். இலங்கை)
"ஊசிஇலை" (2003 மார்கழி) (சுவிஸ்)

{லோகா தானும் ஒரு வலைப்பூவை உருவாக்கியுள்ளார். அவரின் வலைப்பூவை பார்வையிட இங்கே சுட்டவும்.}
READ MORE - முத்தமிட்ட அவள்!

 
 
 

பிரிவுகள்

காப்புரிமை

இங்கு உள்ள அனைத்து பதிவுகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை
MyFreeCopyright.com Registered & Protected

வருகைகள்

Online Users